லட்சுமி நரசிம்மர் கோயிலில் திருக்கல்யாணம்
ADDED :2086 days ago
பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன் பாளையம் பழையூரில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோயிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.பழமையான இக்கோவிலில் லட்சுமி நரசிம்மர் பூதேவி, ஸ்ரீதேவியுடன் உற்சவர் கோலத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.இக்கோவில் வளாகத்தில், நேற்று முன்தினம், லட்சுமி நரசிம்மர், பூதேவி, ஸ்ரீதேவி திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. கோயில் முன்பு பந்தல் அமைக்கப்பட்டு, லட்சுமி நரசிம்மர் திருக்கல்யாணம் நடந்தது. விழாவையொட்டி, பந்தல் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. லட்சுமி நரசிம்மர் திருமண நிச்சயதார்த்தம், சீர் கொண்டு வருதல், திருக்கல்யாணம், மொய் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவையொட்டி, நடந்த அன்னதானத்தில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.