நந்தி பெருமானுக்கு சிறப்பு அலங்காரம்
ADDED :2135 days ago
அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை அகத்தீஸ்வரர் கோவிலில் மாட்டு பொங்கல் சிறப்பு வழிபாடு நடந்தது.அவலுார்பேட்டை அகத்தீஸ்வரர் கோவிலில் மாட்டு பொங்கலை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு சிறப்பு சந்தன அபிஷேகம், மலர் அலங்காரம், தீபாரதனை நடந்தது.தொடர்ந்து, பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் நந்தி பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.