உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காணும் பொங்கல்: திருநள்ளார் கோவிலில் குவிந்த பக்தர்கள்

காணும் பொங்கல்: திருநள்ளார் கோவிலில் குவிந்த பக்தர்கள்

காரைக்கால்: காரைக்காலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் திருநள்ளாறு கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.

காரைக்கால் திருநள்ளாறில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வரபகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இதனால் நாட்டில் பல்வேறு பகுதியிலிருந்து தினம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். காணும் பொங்கலை முன்னிட்டு திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் ஏராளமான பக்தர்கள் அதிகாலையிலிருந்துசுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !