உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிப்., 2ல் திருத்தணி முருகப்பெருமான் வீதியுலா

பிப்., 2ல் திருத்தணி முருகப்பெருமான் வீதியுலா

திருத்தணி: பட்டாபிராமபுரம் கிராமத்தில், வரும் பிப்., 2ம் தேதி, திருத்தணி உற்சவர் முருகப் பெருமான், வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.திருத்தணி முருகன் கோவிலில் இருந்து, ஆண்டுதோறும் உற்சவர் முருகப் பெருமான், ஒரு நாள் பட்டாபிராமபுரம் கிராமத்திற்கு சென்று, அங்குள்ள வீதிகளில், உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.அந்த வகையில், வரும், பிப்., 2ம் தேதி, காலை, 8:00 மணிக்கு உற்சவர் முருகப் பெருமான் மலைப்படிகள் வழியாக, சரவண பொய்கைக்கு வந்து, அங்கிருந்து மாட்டு வண்டியில் உற்சவர் முருகர், திருத்தணி நகர் வழியாக, பட்டாபிராமபுரம் கிராமத்திற்கு மதியம் செல்கிறார்.பின், மாலை, 5:00 மணிக்கு, அங்குள்ள பெருமாள் கோவில் வளாகத்தில், சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.பின், சிறப்பு அலங்காரத்தில், முருகப் பெருமான், பட்டாபிராமபுரம் முழுதும் வீதிகளில் உலா வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !