உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரி கோவிலில் தை அமாவாசை வழிபாடு

சதுரகிரி கோவிலில் தை அமாவாசை வழிபாடு

வத்திராயிருப்பு : சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் நடந்த, தை அமாவாசை வழிபாட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தை அமாவாசைக்காக ஜன., 22 முதல் பக்தர்கள் சதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல அனுமதிக்கபட்டனர். இரு நாட்களில், 2,௦௦௦த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்திருந்தனர்.

இந்நிலையில் தை அமாவாசை வழிபாடு நேற்று நடந்தது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் நேற்று அதிகாலை முதலே தாணிப்பாறையில் குவியத் துவங்கினர். காலை, 5:30 மணி முதல் வனத்துறையினரின் சோதனைக்கு பின் மலையேற அனுமதிக்கபட்டனர். சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் சுவாமிகளுக்கு, 18 வகை அபிஷேகங்கள் நடந்தன. ராஜஅலங்காரத்தில் சுவாமிகள் காட்சியளித்தனர். மதுரை, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார் பகுதிகளிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கபட்டன. வத்திராயிருப்பு மற்றும் பேரையூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !