குடியரசு தின விழாவில் தமிழகம் சார்பில் அசத்திய அய்யனார் சிலை
ADDED :2078 days ago
புதுடில்லி: டில்லியில் நேற்று நடந்த குடியரசு தின விழா அணிவகுப்பில், 16 மாநிலங்களின் சார்பில், அந்தந்த மாநிலங்களின் பெருமைகளை விளக்கும் வகையிலான அலங்கார ஊர்திகள் இடம் பெற்றிருந்தன. தமிழகத்தின் சார்பில், காவல் தெய்வமான அய்யனார் கோவில் திருவிழாவை எடுத்துக் காட்டும் ஊர்தி அணிவகுத்து வந்தது.
இதில், 17 அடி உயர பிரமாண்டமான அய்யனார் சிலை, குதிரைகள், காவலாளிகள் என, அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. தமிழகத்தின் பாரம்பரிய இசை, நடனங்களும் ஊர்தியில் இடம் பெற்றன; இது, அனைவரையும் கவர்ந்தது. கோவா மாநிலத்தின் சார்பில், தவளைகளை காப்போம் என்ற தலைப்பில், தவளைகள் வேட்டையாடப்படுவதை தவிர்க்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஊர்தியும், அனைவரையும் கவர்ந்தது.