கோவிலில் அக்னி பிரவேச நாள்: நெய் குளம் அமைத்து வழிபாடு
ADDED :2120 days ago
உடுமலை: உடுமலை வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், அக்னி பிரவேச நாளையொட்டி, நெய் குளம் அமைத்து, அம்மனை பக்தர்கள் வழிபட்டனர். உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில் வீதியில், வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
கோவிலில், நேற்று அக்னி பிரவேச நாளையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தன. நெய் குளம் அமைத்து, அதில், அம்மன் தரிசனம் பார்த்து, பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து, சிறப்பு ஆராதனைகள் நடந்தன. மாலையில் ஆந்திரா பெனுகுண்டாவில் இருந்து வந்த, கன்னிகா பரமேஸ்வரி அம்மன் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில், திரளாக பக்தர்கள் பங்கேற்றனர்; பிரசாதம் வழங்கப்பட்டது.