மேலும் செய்திகள்
அலங்காநல்லுார் வரம் தரும் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
2046 days ago
ஓணம் பண்டிகை : போடி ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு
2046 days ago
விலங்கல்பட்டு சிவசுப்பரமணியர் கோவிலில் திருக்கல்யாணம்
2046 days ago
ப.வேலூர்: பாண்டமங்கலம், பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி திருக்கோவில் திருத்தேர் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.ப.வேலூர் அடுத்த, பாண்டமங்கலத்தில் பிரசித்தி பெற்ற வெங்கட்ரமண சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலின் திருத்தேர் திருவிழா, கடந்த, 24 காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும், 30 காலை, 8:00 மணிக்கு மேல் பல்லக்கு உற்சவம், மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், இரவு, 7:00 மணிக்கு புஷ்ப விமானத்தில் சாமி புறப்பாடு நடைபெற உள்ளது. ஜன., 31ல் குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா, பிப்.,1 அதிகாலை, 4:00 மணிக்கு மேல், 5:30 மணிக்குள் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளுல், மாலை, 4:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெறுகிறது. பிப்., 2ல் வராஹபுஷ்கரணியில் தீர்த்தவாரி சக்கராஸ்நானம், 3ல் வசந்த உற்சவம், 4ல் புஷ்ப யாகம், 5ல் சுவாமி புறப்பாடு நடக்கவுள்ளது. ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர், தக்கார் மற்றும் ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.
2046 days ago
2046 days ago
2046 days ago