மேலும் செய்திகள்
அலங்காநல்லுார் வரம் தரும் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
2045 days ago
ஓணம் பண்டிகை : போடி ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு
2045 days ago
விலங்கல்பட்டு சிவசுப்பரமணியர் கோவிலில் திருக்கல்யாணம்
2045 days ago
அன்னுார் : குன்னத்துார் புதுார், நாராயணசுவாமி கோவில் கும்பாபிஷேக விழா, வரும், பிப்., 7ம் தேதி நடக்கிறது.குன்னத்துார் புதுார், நாராயணசுவாமி கோவில் பழமையானது. இக்கோவிலில் பல லட்சம் ரூபாயில், பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன.இதையடுத்து கும்பாபிஷேக விழா வரும், 5ம் தேதி காலையில், சுதர்சன ஹோமத்துடன் துவங்குகிறது. அன்று இரவு, முதற்கால வேள்வியும், ஓரைக்கால்பாளையம் குழுவின் பஜனையும் நடக்கிறது.வரும், 6ம் தேதி காலையில், இரண்டாம் கால வேள்வியும், மாலையில் கலசங்கள் நிறுவுதலும், இரவில், ஜாகீர் நாயக்கன்பாளையம் ராமர் குழுவின் பஜனையும், விராலியூர் பெண்கள் பிருந்தாவனமும் நடக்கிறது.வரும், 7ம் தேதி காலை 7:45 மணிக்கு, கோபுரம் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி சமேதர நாராயண சுவாமிக்கு, கும்பாபிஷேகம் நடக்கிறது.பேரூர் ஆதீனம், சாந்தலிங்க மருதாசல அடிகளும், சிரவை ஆதீனம், குமரகுருபர அடிகளும் நடத்தி வைக்கின்றனர்.இதையடுத்து, சுவாமி திருக்கல்யாணமும், மதியம் மேட்டுப்பாளையம், வாசுதேவன் குழுவின் பஜனையும், மாலையில் சுவாமி திருவீதியுலாவும் நடக்கிறது.ஏற்பாடுகளை தாசபளஞ்சிக ராமானுஜ பக்தஜன சங்கத்தினர் செய்து வருகின்றனர்.
2045 days ago
2045 days ago
2045 days ago