பஞ்சலட்சுமி தலம்
ADDED :5024 days ago
கும்பகோணம் அருகிலுள்ள நாச்சியார் கோயிலில் இருந்து 5கி.மீ., தொலைவில் குடவாசல் செல்லும் ரோட்டிலுள்ளது திருச்சேறை சாரநாதப் பெருமாள் கோயில். 108 திவ்யதேசங்களில் ஒன்றான இத்தலத்தை திருமங்கையாழ்வார் பாடியுள்ளார். ஒருசமயம், உலகம் அழிந்தவேளையில், பிரம்மா இங்கிருந்தே மண் எடுத்து குடம் செய்து வேதங்களைப் பாதுகாத்ததாக தலவரலாறு கூறுகிறது. காவிரியன்னை இங்குள்ள அரசமரத்தடியில் தவமிருந்தபோது, பெருமாள் குழந்தை வடிவில் சங்குசக்ரதாரியாக காட்சி அளித்தார். இங்குள்ள சாரபுஷ்கரணி (குளம்)கரையில், பெருமாள் காவிரித்தாயின் மடியில் தவழும் கோலத்தைக் காணலாம். பெருமாளுடன் இங்கு வந்தபோது, அவருடன் ஸ்ரீதேவி,பூதேவி, நீளாதேவி, மகாலட்சுமி, சாரநாயகி என்னும் ஐந்து தேவியர் உடன் வந்ததாகக் கூறுவர். அதனால், இத்தலத்திற்கு பஞ்சலட்சுமி தலம்என்ற சிறப்புப்பெயர் உண்டு.