உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மலையனூர் கோவிலில் உண்டியல் வசூல் ரூ.45, 95, 846

மேல்மலையனூர் கோவிலில் உண்டியல் வசூல் ரூ.45, 95, 846

அவலுார்பேட்டை:மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் 45 லட்சத்து 95 ஆயிரத்து 846 ரூபாய் உண்டியல் வசூல் ஆனது.
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் தை மாத அமாவாசை முடிந்து பக்தர்கள் காணிக்கை உண்டியல்கள் திறக்கப்பட்டன. இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர்கள் ராமு, ஜான்சிராணி முன்னிலையில் கோவில் வளாகத்தில் காணிக்கை பணம் எண்ணும் பணி நடந்தது.இதில், 45 லட்சத்து 95 ஆயிரத்து 846 ரூபாயும், 147 கிராம் தங்க நகைகள், 868 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவை பக்தர்கள் உண்டியல்களில் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.இதில் அறங்காவலர் குழுத் தலைவர் செல்வம், கண்காணிப்பாளர் செண்பகம், அறங்காவலர்கள், உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !