உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் கோவிலில் திருத்தொண்டர் குருபூஜை

விநாயகர் கோவிலில் திருத்தொண்டர் குருபூஜை

செஞ்சி:செஞ்சி அடுத்த மொடையூர் கிராமத்தில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடகர சதுர்த்தி விழா, திருத்தொண்டர் குருபூஜை விழா நடந்தது.
அதனையொட்டி, மாலை 6:00 மணிக்கு வட புத்துார் சைவநெறி திருத்தொண்டர் இளஞ்செழியன் சுவாமிகள் குழுவினரால் கணபதி வேள்வியும், திருத்தொண்டர் தொகையும் நடந்தது. தொடர்ந்து வரசித்தி விநாயகருக்கு கலசாபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனையும் நடந்தது.விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !