கும்பம் (அவிட்டம், 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3)-கனவு நிறைவேறும் வருமானம் தடுமாறும் 55/100
உறவினர், நண்பரை உபசரித்து மகிழும் கும்பராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு நான்காம் இடமான ரிஷபத்தில் குருபகவான் பெயர்ச்சியாகி உள்ளார். குருவின் நான்காம் இட அமர்வு (அர்த்தாஷ்டம குரு) வாழ்வில் சில சிரம பலன்களை அனுபவிக்க வைக்கும். இருப்பினும் குருபகவானின் பார்வை பதிகிற ஸ்தானங்களின் வழியாக சில நல்ல பலன்களையும் பெறலாம். ரிஷபத்தில் உள்ள குரு தனது 5, 7, 9 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு எட்டாம் இடமான ஆயுள், பத்தாம் இடமான தொழில், பன்னிரெண்டாம் இடமான விரயம் ஆகிய ஸ்தானங்களை பார்க்கிறார். மனதில் சஞ்சலம் தோன்றும். குடும்பப் பொறுப்புக்களை தைரியத்துடன் எதிர்கொள்வது நன்மை தரும். எவரிடமும் அளவுடன் பேசுங்கள். தம்பி, தங்கைகளின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்ய தாமதம் ஆகுமென்பதால், அவர்களின் அதிருப்தியை சம்பாதிப்பீர்கள். சிலருக்கு உடன்பிறந்தவர்களாலும் உறவினர்களாலும் தொல்லை வந்துவிலகும். பணவரவு சுமாராகவே இருக்கும். வீடு, வாகன வகையில் பராமரிப்புச் செலவு அதிகரிக்கும். பயணங்களில் நிதான வேகத்துடன் செயல்படுவதால் விபத்து அணுகாமல் தவிர்க்கலாம். தாயின் தேவையை நிறைவேற்ற நினைத்தாலும் பணிச்சுமையால் அது தாமதமாகும். புத்திரர்கள் சுயதேவைகளை நிறைவேற்ற பிடிவாத குணத்துடன் நடந்துகொள்வர். உடல்நல பாதிப்பு ஏற்படும் போது அலட்சியம் செய்யாமல், உடனடி சிகிச்சை எடுத்து விடுங்கள். கணவன், மனைவி குடும்பச் சூழ்நிலையை உணர்ந்து ஒன்றுபட்ட மனதுடன் செயல்படுவர். வாழ்வின் நெடுநாளைய கனவு ஒன்று நிறைவேறும். கஷ்டமான சூழ்நிலையிலும் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். சுபசெலவுகள் அதிகரிப்பதால் சேமிப்பு பணம் செலவாவதும் சிறு அளவில் கடன் பெறுவதுமான நிலைமை உண்டு.
தொழிலதிபர்கள்: கல்வி, நிதி நிறுவனம், ரியல் எஸ்டேட், மருத்துவமனை, லாட்ஜ், ஓட்டல், இரும்பு, டிராவல்ஸ் நடத்துவோர், டெக்ஸ்டைல்ஸ், காகிதம், தோல், மினரல் வாட்டர், கட்டுமானப்பொருள், மின்சார மின்னணு பொருள் உற்பத்தி செய்வோர் அதிக மூலதனத்தேவைக்கு உட்படுவர். புதிய ஒப்பந்தங்கள் எதிர்பாராத வகையில் கிடைக்கும். பிற தொழில் செய்வோர் உற்பத்தியை உயர்த்த தரமான பணியாளர்களை பணியமர்த்துவதும், அதனால் அதிக செலவாவதுமான சூழ்நிலை இருக்கும். புதியதொழில்நுட்பங்களை பயன்படுத்ததேவையான இயந்திரம் வாங்குவீர்கள். லாபம் சுமாராக இருக்கும். புதிய தொழில் துவங்க விரும்புபவர்கள் அளவான மூலதனத்தில் திட்டங்களை நிறைவேற்றலாம்.
வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, அரிசி, கட்டுமானப் பொருள், ஆட்டோமொபைல் உதிரிபாகம், விவசாயக் கருவிகள், இடுபொருட்கள், மருந்து, பூஜைப்பொருள், எண்ணெய், பேக்கரி பொருட்களை வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபார அபிவிருத்தியும் எதிர்பார்த்த லாபவிகிதமும் கிடைக்கும். மற்ற வியாபாரிகளுக்கு இவர்களை விட குறைந்த லாபம் கிடைக்கும்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணியை விரைந்து முடிக்க ஆர்வம் கொள்வர். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு தடையின்றி கிடைக்கும். பணிச்சிறப்பை பாராட்டி கூடுதல் பணவரவு, சலுகைகள் கிடைக்கும். சக பணியாளர்களுக்கு கொடுக்கல், வாங்கலில் நிதான நடைமுறை பின்பற்ற வேண்டும். எதிரிகளிடம் இருந்து விலகுவது நன்மை தரும். இயந்திரங்களை கையாளுபவர்கள் பாதுகாப்பு நடைமுறையைப் பின்பற்றவும்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் நிலுவைப்பணிகளை அறிந்து நிறைவேற்றுவர். அன்றாடப்பணி சிறந்து நன்மதிப்பை பெற்றுத்தரும். பதவி உயர்வு, எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். குடும்பப் பெண்கள் குடும்பநலம் பாதுகாப்பதில் கவனத்துடன் செயல்படுவர். உறவினர்கள் கருத்து வேறுபாடு கொள்வர். குடும்பச்செலவிற்கு போதுமான பணம் இராது. சிக்கனம் பின்பற்றுவீர்கள். நகை இரவல் கொடுக்க, வாங்கக்கூடாது.சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் ஆர்டர் கிடைத்து உற்பத்தியை உயர்த்துவர். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.
மாணவர்கள்: இன்ஜினியரிங், மருத்துவம், விவசாயம், சட்டம், ஆசிரியர் பயிற்சி, மேனேஜ்மென்ட், கலை, வணிகம், அறிவியல் துறை மாணவர்கள் படிப்பில் சிறக்க ஆசிரியர்கள் தகுந்த உதவிபுரிவர். இந்த வாய்ப்பைப் பயன்படுத்துவதால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும். ஆரம்ப, மேல்நிலை மாணவர்கள் நன்றாகப் படிப்பர். படிப்புக்கான செலவில் சிக்கனம் நல்லது. படித்து முடித்து வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவர்களுக்கு திருப்திகரமான பணி கிடைக்கும். பெற்றோரை மதித்து செயல்படுவது அவசியம்.
அரசியல்வாதிகள்: அரசியல் பணி சிறக்க புதிய திட்டங்களை உருவாக்கி செயல்படுத்துவீர்கள். ஆதரவாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அதிகாரிகள் உதவிகரமாக செயல்படுவர். பதவி பொறுப்பை தக்கவைத்துக்கொள்வதில் சிறு குறுக்கீடுகள் வந்து பின்னர் சரியாகும். எதிரிகளிடம் எந்த வகையிலும் பிடிகொடுக்காத வகையில் சிரமம் தவிர்க்கலாம். புத்திரர்கள் அரசியல்பணிக்கு உதவமாட்டார்கள்.
விவசாயிகள்: விவசாயப்பணிகளை நிறைவேற்ற கூடுதல் பணியாட்களை நியமித்து அதிகமாக செலவழிக்க வேண்டியிருக்கும். ஆனாலும், தாராள மகசூல் கிடைத்து உபரி வருமானம் கிடைக்கும். கால்நடை வளர்ப்பிலும் முன்னேற்றம் உண்டு. நில விவகாரங்களில் அனுசரித்து நடந்து கொண்டால் சிரமம் தவிர்க்கலாம்.
பரிகாரம்: நடராஜரை வழிபடுவதால் தொழில் சிறந்து எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.
செல்ல வேண்டிய தலம்: சிதம்பரம் நடராஜர் கோயில்.
பரிகாரப்பாடல்: ஆடியபாதம் மன்றாடிய பாதம்
ஆடியபாதம் நின்றாடிய பாதம்
பாடிய வேதங்கள் தேடிய பாதம்
பக்திசெய் பக்தருக்கு தித்திக்கும் பாதம்
நாடிய மாதவர் தேடிய பாதம்
நாதாந்த நாட்டுக்கு நாயக பாதம்.
வக்ர கால பலன்: 10.10.2012 முதல் 6.2.2013 வரை உங்கள் ராசிநாதன் சனிபகவானுக்கு பகை கிரகமான சந்திரனின் சாரத்தில், குரு வக்ரகதி பெறுகிறார். உங்களைச் சார்ந்தவர்களின் தகுதி, குணம் அறிந்து பழக வேண்டிய நேரம் இது. குடும்பத் தேவைகளை நிறைவேற்ற சேமிப்பு பணத்தைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். உடன் பிறந்தவர்களின் செயல் உங்கள் மனதை சஞ்சலப்படுத்தும். பயணத்தில் மிதவேகம் பின்பற்றுவது அவசியம். இதனால் விபத்து, துன்பம் வராமல் தவிர்க்கலாம். புத்திரர்களின் கவனக்குறைவான செயல்களை அளவுடன் கண்டிப்பது மட்டுமே நற்பலன் பெற உதவும். உடல்நிலை சிறிது பாதிக்கும். வழக்கு விவகாரங்களில் சாதக தீர்வு பெற தாமதம் ஏற்படும். தம்பதியர் குடும்ப நலன் சிறக்க தேவையான நற்குணங்களைப் பின்பற்றுவர். தொழில், வியாபார வளர்ச்சி திட்டமிட்டபடி அதிகரிக்கும். பணியில் உள்ளவர்கள், தமக்குரிய பொறுப்பை திறம்பட நிறைவேற்றி நற்பெயர் பெறுவர்.