அங்காளபரமேஸ்வரி கோவிலில் குண்டம் திருவிழா
ADDED :2101 days ago
அன்னூர்: கஞ்சப்பள்ளி, அங்காள பரமேஸ்வரி கோவிலில், பூ குண்டம் திருவிழா வரும், 22 ம் தேதி நடக்கிறது. கஞ்சப்பள்ளியில், பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 15 ம் ஆண்டு குண்டம் திருவிழா கடந்த, 9ஆம் தேதி முளைப்பாரி இடுதலுடன் துவங்கியது. வரும், 21ம் தேதி காலை 6:00 மணிக்கு குண்டம் கண் திறக்கப்படுகிறது. மாலையில், கன்னிமார் பூஜை, சுமங்கலி பூஜை, கோ பூஜை நடக்கிறது. வரும், 22ஆம் தேதி காலை 5:30 மணிக்கு, அக்னி குண்டம் இறங்குதல் நடக்கிறது. இதையடுத்து, காலை 11:00 மணிக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடக்கிறது. மாலையில் விசர்ஜன ஊர்வலம் நடக்கிறது.