வாலகுருநாதன் அங்காளஈஸ்வரி கோயில் கும்பாபிஷேகம்
ADDED :2053 days ago
நரிக்குடி: நரிக்குடி அ.முக்குளம் வந்தவாசி பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ வாலகுருநாதன் அங்காள ஈஸ்வரி கோயில், இரண்டு வருடங்களுக்கு முன் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த மாதம் இக்கோயில் கோபுரத்தில் இருந்த கலசத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். அ.முக்குளம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் மாசி களரியை முன்னிட்டு புதிதாக கலசம் வைக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பங்காளிகள் அனைவரும் கலந்துகொண்டனர். அன்னதானம் நடந்தது.