உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரியில் அமாவாசை வழிபாடு: பக்தர்கள் தரிசனம்

சதுரகிரியில் அமாவாசை வழிபாடு: பக்தர்கள் தரிசனம்

ஸ்ரீவில்லிபுத்துார்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மாசி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நேற்று சாமி தரிசனம் செய்தனர். நேற்று அதிகாலை தாணிப்பாறையில் குவிந்திருந்த பக்தர்கள், காலை 6:00 மணி முதல் மலை ஏற அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள், வழியில் உள்ள அம்மன் மற்றும் பிலாவடி கருப்பசாமி, இரட்டை லிங்கம் கோயில்களில் தரிசனம் செய்து மலை ஏறினர்.பின்னர் பகல் 12:00 மணிக்கு சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி, சுந்தரமகாலிங்கம் கோயிலில் நடந்த அமாவாசை வழிபாட்டில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மாலை 4:00 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பல்வேறு பகுதியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டிருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !