சுப்ரமணியருக்கு சத்ரு சம்ஹார சிறப்பு பூஜை
ADDED :2112 days ago
வீரபாண்டி: மழை பொழிய வேண்டி, சுப்ரமணியருக்கு, சத்ரு சம்ஹார பூஜை நடந்தது. அகில இந்திய சிவாச்சாரியார் சங்கம், தமிழ்நாடு சிவாச்சாரியார் சங்கம் இணைந்து, நாட்டில் நல்ல மழை பொழிய, அனைவரும் சுபிட்சமாக வாழ, உலக நன்மை வேண்டி, சேலத்திலுள்ள முக்கிய கோவில்களில், மாதந்தோறும் ஒரு செவ்வாயில், முருகனுக்கு சத்ரு சம்ஹார பூஜை செய்து வருகின்றனர். அதன்படி, உத்தமசோழபுரம், கரபுரநாதர் கோவிலிலுள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியருக்கு, நேற்று, திருமஞ்சனம் செய்து, வெள்ளை பட்டு வஸ்திரம் சார்த்தி, ஆறு வகை பூ, பழம், பட்சணம், சாதம் வைத்து, பூஜை செய்யப்பட்டது. காலை, 10:00 முதல், மதியம், 12:00 மணி வரை நடந்த பூஜையில், 30க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார், வேத மந்திரங்களை, பாராயணம் செய்தனர். திரளான பக்தர்கள், கந்தனை வழிபட்டனர். பூஜையில் வைத்த அன்னம், பிரசாதமாக வழங்கப்பட்டது.