அறிவுத்திருக்கோயில் ஆண்டு விழா
ADDED :2110 days ago
வத்தலக்குண்டு:அறிவுத்திருக்கோயில் ஆண்டுவிழா மண்டல தலைவர் தாமோதரன் தலைமையில் நடந்தது. துணை பேராசிரியர் கீர்த்தனா இறைவணக்கம் பாடினார். துணை பேராசிரியர் கமலம் தவம் மேற்கொண்டார். நிர்வாக அறங்காவலர் தங்கவேலு வரவேற்றார். மண்டலச் செயலாளர் பாலச்சந்தர் வாழ்த்துரை வழங்கினார். அறிவுத்திருக்கோயில் செயலாளர் விஜயபாஸ்கர் நன்றி கூறினார். திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சேர்ந்த அறிவுத் திருக்கோயில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.