அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் குண்டம் விழா
ADDED :2043 days ago
ஈரோடு: ஈரோடு, கீரக்கார வீதி, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மஹா சிவராத்திரி குண்டம் திருவிழா, கடந்த, 21ல் சந்தன காப்பு அலங்காரத்துடன் துவங்கியது. இதையடுத்து ஈரோடு காரை வாய்க்கால் கோவில் கரகம் முத்தரித்து, சக்தி அழைத்து அம்மன் கோவில் வருதல், தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. அக்னி கபாலம் எடுத்து, அம்மனுக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யும் பூஜை நேற்று நடந்தது. இன்று இரவில் குண்டம் பூப்போடுதல், நாளை அதிகாலை, 4:00 மணிக்கு மேல் குண்டம் இறங்குதலும், அன்னதானமும், அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் பூகையும் நடக்கிறது. மாலையில் மாவிளக்கு படைத்தல், இரவில் முத்து பல்லக்கில் அம்மன் சிங்க வாகனத்தில் உலா நடக்கிறது. மார்ச், 2ல் காலை, 7:00 மணிக்கு மறு அபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது.