மாசி மக உற்சவம்: விபசித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரர் காட்சி
ADDED :2367 days ago
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக பிரம்மோற்சவத்தில், விபசித்து முனிவருக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி காட்சி தரும் ஐதீக நிகழ்ச்சி இன்று நடந்தது.
விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக பிரம்மோற்சவம், கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி தினசரி சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. விழாவில் இன்று(மார்.,4) வெள்ளி ரிஷப வாகனத்தில் வி ருத்தகிரீஸ்வரர் எழுந்தருளி, விபசித்து முனிவருக்கு காட்சியளிக்கும் ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 7ம்தேதி தேரோட்டமும், 8ம் தேதி மாசி மக தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறுகிறது.