மாசி மாத வள்ளலார் பூசவிழா
ADDED :2296 days ago
மணவாள நகர்:மணவாள நகர் வள்ளலார் வளாகத்தில், மாசி மாத வள்ளலார் பூச விழா, நாளை நடைபெறுகிறது.திருவள்ளூர் அடுத்த, மணவாள நகர் பகுதியில் அமைந்துள்ளது வள்ளலார் வளாகம். இங்கு, மாதந்தோறும் உயிரிரக்க உணர்வாளர் மன்றம் சார்பில், வள்ளலாருக்கு பூச விழா நடந்து வருகிறது.இங்கு, மாசி மாத பூச விழாவும், 103வது பூச விழாவும், நாளை, காலை, 9:30 மணிக்கு திருவிளக்கு ஏற்றுதல், சன்மார்க்க கொடி ஏற்றுதலுடன் விழா துவங்குகிறது.அதை தொடர்ந்து, அகவல் பாராயணம், சிறப்புச் சொற்பொழிவு, திருக்குறள் வகுப்பும் நடைபெறும்.