திருவண்ணாமலை நடராஜருக்கு மாசி சதுர்த்தசி அபிஷேகம்
ADDED :2053 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், மாசி சதுர்த்தசி அபிஷேகம் நடந்தது.
கோவில்களில், ஆறு கால அபிஷேகங்கள் நடப்பதை நினைவு கூறும் வகையில், அபிஷேக பிரியரான சிவரூபமான நடராஜ பெருமானுக்கு, ஆண்டுக்கு ஆறு முறை அபிஷேகம் நடக்கும். இதில், மார்கழி திருவாதிரை, மாசி வளர்பிறை சதுர்த்தசி, ஆனி உத்திரம், ஆவணி வளர்பிறை சதுர்த்தசி, சித்திரை திருவோணம், புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசி நாளில் சிறப்பு அபிஷேகம் நடக்கும். இதில் சூரியன், கும்ப ராசியில் இருக்கும் காலமான, மாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதியில், பவுர்ணமிக்கு முதல் நாள், நடராஜருக்கு நடக்கும் அபிஷேகம் மிகவும் சிறப்பானது. அதன்படி, நடராஜருக்கு நேற்று சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன.