விஜயா ஏகாதசி
ADDED :2145 days ago
பங்குனி மாதத் தேய்பிறையில் வருவது. நாம் எடுத்த காாியத்தில் எந்தவித தடங்கலும் ஏற்படாமல் வெற்றியடைய கடைப்பிடிக்க வேண்டிய சிறந்த விரதம்தான் இந்த ஏகாதசி விரதம். ஒரு வாழையிலையில் நவதானியங்களை (எள் தவிர) பரப்பிவைத்து, அவற்றின்மேல் பெருமாள் திருவுருவப்படத்தை வைத்துப் பூஜிக்கவேண்டும். மறுநாள் துவாதசியன்று ஒரு சாதுவுக்கு அல்லது ஏழைக்கு அன்னதானம் செய்து, பூஜை செய்த கலசத்தையும் தானியங்களையும் அவருக்குத் தந்துவிட்டு பின்னா் நாம் உண்ணவேண்டும். ராமபிரான், ஒரு முனிவா் கூறிய ஆலோசனையின் படி விஜயா ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்து, இவ்விரத மகிமையால் இராவணனிடமிருந்து சீதையை மீட்டுவந்தாராம்!