உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி வின்ச் இன்று இயங்கும்

பழநி வின்ச் இன்று இயங்கும்

பழநி : பழநி மலைக்கோயிலுக்கு மூன்று வின்ச்கள் நாள்தோறும் இயக்கப்படுகிறது. இவற்றில் முதலாம் எண் வின்ச் பராமரிப்பு பணிகள் கடந்த பிப்.,18 முதல் நடந்தது. உருளைகள் ஆய்வு செய்யப்பட்டு, தேய்மானம், சேதமடைந்த உபகரணங்கள் மாற்றப்பட்டுள்ளது. பெட்டிகளில் குறிப்பிட்ட எடை வைத்து சோதனை ஓட்டம் நேற்று (மார்ச் 17) நடந்தது. பக்தர்கள் பயன்பாட்டிற்கு இன்று முதல் இயங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !