நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் திங்கள்கிழமை பூஜை ரத்து
ADDED :2085 days ago
சென்னிமலை: சென்னிமலை அருகே, புஞ்சை பாலத்தொழுவு கிராமத்தில், நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு பங்குனி மாத திங்கள்கிழமைகளில் மட்டும், சிறப்பு வழிபாடு நடக்கிறது. அதன்படி கடந்த, 16ல் முதல் வார பூஜை நடந்தது. ஈரோடு மட்டுமின்றி திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்கு குவிந்தனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வரும் 23, 30 மற்றும் ஏப்ரல் 5, 12 தேதிகளில் நடக்கும் வழிபாடு ரத்து செய்யப்படுகிறது. எனவே, திங்கள்கிழமையில் பக்தர்கள் வந்து ஏமாற வேண்டாம் என, கோவில் நிர்வாகிகள் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.