ஸ்ரீவி., பெரியமாரியம்மன் பூக்குழி வாட்ஸ் ஆப் வதந்தி
ஸ்ரீவில்லிபுத்துார் : கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலத்தில் கோயில் திருவிழாக்கள் நிறுத்தப்பட்டு, பக்தர்கள் தரிசனம் செய்யவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரியமாரியம்மன் கோயில் பூக்குழி குறித்து நேற்றுவாட்ஸ் ஆப்பில் வதந்தி பரவியது. இதன்படி விரதமிருந்தவர்கள், தவறாமல் இன்று, மஞ்சள் நீராடி, கோயில் முன்புள்ள பூவாசலை 3 முறை சுற்றிவந்து, காப்புக் காணிக்கையைகோயில் உண்டியலில் செலுத்தி, விரதத்தை நிறைவேற்று கொள்ளுங்கள் என தெரிவிக்கப்பட்டது. அதிகளவில் பரவிய இப்பதிவை,கோயில் நிர்வாகம் மறுத்துள்ளது. இந்நிலையில் இந்த வதந்தியை மறுத்து, பேரிடர் சமயத்தில் அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வேண்டுகோள் விடுத்து, பதில் வாட்ஸ்ஆப் பதிவு வெளியிடப்பட்டது. வதந்தி பரப்பியவர்களை ஸ்ரீவில்லிபுத்துார் போலீசார் தேடி வருகின்றனர்.