திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் இன்றி பிரதோஷ பூஜை
ADDED :2120 days ago
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கம்பத்தடி மண்டபத்தில் மயில், மூஞ்சுறுவுடன் பெரிய நந்தி சிலை உள்ளது. பிரதோஷ நாளில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை, தீபாராதனை நடக்கும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். கொரோனா எதிரொலியாக மார்ச் 31 வரை கோயிலில் பூஜைகள் முடிந்து நடை சாத்தப்படுகிறது. கோயில் வரலாற்றில் நேற்று முன்தினம் மாலை தான் பக்தர்கள் இன்றி முதல் முறையாக பிரதோஷ பூஜை நடந்தது என சிவாச்சார்யார்கள் தெரிவித்தனர்.