உலக மக்கள் நலன் காக்க பழநியில் ஸ்கந்த ஹோமம்
ADDED :2022 days ago
பழநி: உலக மக்கள் நலன் காக்க பழநி மலைக்கோயிலில் ஸ்கந்த ஹோமம் நடந்தது. உலகம் முழுவதும் ‘கொரோனா’ வைரஸ் பரவி வருகிறது. இந்த கொடிய தொற்றை தவிர்க்க, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பழநி கோயிலில் சுவாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பங்குனி உத்திர திருவிழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மாத கார்த்திகை தினமான நேற்று காலை 10:00 மணிக்கு உலக மக்கள் நலன் காக்க பழநி மலைக்கோயிலில் ஸ்கந்த ஹோமம் நடந்தது. இதில் காய்ச்சல் நோய், பயம் நீங்க 108 மூலிகை பொருட்களை கொண்டு ஹோமம் செய்யப்பட்டது. உச்சிக்கால பூஜையில் அபிேஷகம் செய்யப்பட்டது. கோவில் ஸ்தானிக அர்ச்சகர்கள் பங்கேற்றனர்.