உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொடிய வைரஸில் இருந்து தப்பிக்க வேதங்கள் கூறும் எளிய வழி!

கொடிய வைரஸில் இருந்து தப்பிக்க வேதங்கள் கூறும் எளிய வழி!

உலக நாடுகளைத் தாண்டி இந்தியாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தமிழகத்திலும் பரவத் தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸின் வீரியத்தைக் கட்டுப்படுத்தும் அளவிலான மருந்துகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இத்தகைய நுண்ணுயிரிகள் மற்றும் இந்த நுண்ணிய உயிரினங்களால் ஏற்படும் நோய்களைத் தடுக்க அதர்வன வேதத்தில் குறிப்புகள் உள்ளன.

ஹோமங்கள் எல்லாவற்றிலும் மிகச் சிறியதும் எளியதுமான ஒன்று அக்னிஹோத்ரம். இது இயற்கையின் விஞ்ஞான வழியில் மனிதனின் மனத்தைப் பண்படுத்துகிறது. அக்னிஹோத்திரம் மூலம் சரும நோய்கள், மூச்சு வியாதிகள், இருதய பாதிப்புகள், தொண்டை வியாதிகள் குணமடைகிறது. அக்னிஹோத்திரம் ஹோமாதெரபியைப் போல் செயல்பட்டு, உடலின் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்திருக்கிறது. மனம் அமைதிப்படுவதால் ரத்தத்தின் பண்பும் துடிப்பும் மேம்படுகின்றன. வியாதிகளால் வரும் பாதிப்புகள் குறைகிறது.

வேதங்களும் பழங்கால மருத்துவர்களும் சில மந்திரங்களை குறிபிட்டுள்ளனர். இக்குறிப்பிட்ட மந்திரங்களை குறிப்பிட்ட நேரத்தில் கூறும் போது அது சுற்றுச்சூழலில் குறிப்பிட்ட ஆக்கபூர்வமான அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. இந்த ஒலி அதிர்வுகள் பலன்களை அதிகரிக்கச் செய்கிறது.

அதிகாலையில் உச்சரிக்கப்பட வேண்டிய அக்னிஹோத்ர மந்திரம்

சூர்யாய ஸ்வாஹா சூர்யாய இதம் ந மம
பிரஜாபதயே ஸ்வாஹா பிரஜாபதயே இதம் நமம

மாலையில் உச்சரிக்கப்பட வேண்டிய அக்னிஹோத்ரம்

அக்நயே ஸ்வாஹா அக்நயே இதம் ந மம
பிரஜாபதயே ஸ்வாஹா பிரஜாபதயே இதம் ந மம

மேலும் சக்தி வாய்ந்த ருத்ர மந்திரத்தை தொடர்ந்து சொல்லி வந்தால் புது சக்தி பெற்று மரண பயம் நீங்கப் பெறுவர் என்பது ஐதீகம். மேலும் தகவலுக்கு http://atmanandanatha.com மற்றும் மந்திரத்தை கேட்க https://www.youtube.com/watch?v=pUB7wiIzwmU&feature=youtu.be ஐ கிளிக் செய்யவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !