சன்மார்க்க சத்திய சேவா சங்கத்தில் சன்மார்க்க பூஜை
ADDED :2011 days ago
மதுரை : மதுரை சன்மார்க்க சத்திய சேவா சங்கத்தில் சன்மார்க்க சேவகர் ராமநாதன் தலைமையில் வைத்தீஸ்வரர், பாலம்பிகை பூஜை நடந்தது. வெப்பு தோஷம், குழந்தைகளுக்கு பாலாரிஷ்ட தோஷம் நீங்கவும், முதியோர் நலன் காக்கவும் பூஜை நடத்தப்பட்டது. ஆதிசங்கரர் அருளிய வைத்தியநாத அஷ்டகம், தேவாரம், திருவருட்பா பாடல்களை பக்தர்கள் பாடினர். ஜெனனி, ரத்னேஸ்வரி ஜோதி வழிபாடு நடத்தினர்.