விரதமிருக்க வயசு 20
ADDED :2022 days ago
ராமநவமி விரதம் குறித்து காஞ்சிப்பெரியவர் கூறியதாவது. இந்த விரதமிருக்க குறைந்த பட்ச வயது 20. சிறுவர்களுக்கு இந்த விரதம் கட்டாயமில்லை என்றாலும் கோயில் அல்லது பஜனை மடங்களில் ராம வழிபாடு நடத்த உதவலாம். ‘ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்’ என்னும் 13 எழுத்து மந்திரத்தை ஒருவர் சொல்ல, மற்றவர்கள் தொடர்ந்து சொல்லியபடியே ஊரிலுள்ள தெருக்களை சுற்றி வருவது நல்லது. ராமர் கோயிலில் ராமாயணம் குறித்த கலைநிகழ்ச்சிகளை நடத்துவது அவசியம். நவமிக்கு மறுநாள் காலையில், கோயிலில் மறுபூஜை நடத்த வேண்டும். அப்போது ‘நாட்டிலுள்ள அனைவரும் பக்தி, ஒழுக்கமுடன் வாழ அருள்புரிவாயாக’ என பிரார்த்திக்க வேண்டும்.