கொடுத்ததெல்லாம் யாருக்காக?
பதிலளிக்கிறார் ஷீரடிபாபா
* பணவசதியைக் கடவுள் கொடுத்ததாகக் கருதி, செல்வந்தர்கள் தர்மம் செய்ய வேண்டும்.
* இருப்பதைக் கொண்டு மனநிறைவுடன் வாழ்பவனே புத்திசாலி.
* சண்டையிடாதீர்கள். அனைவரிடமும் சமாதானத்துடன் வாழுங்கள்.
* உதவி கேட்டு நிற்பவரை நாய் போல குரைத்து விரட்டத் தேவையில்லை. நாலு வார்த்தையாவது அன்புடன் கூறுங்கள்.
* இன்பத்தையும், துன்பத்தையும் சமமாகக் கருதுங்கள்.
* கடவுள் மீது திடமான நம்பிக்கை கொள்ளுங்கள். எப்போதும் மகிழ்ச்சி காண்பீர்கள்.
* தனக்கும், நாட்டுக்கும் பயனுள்ளவனாக நல்வழியில் நடப்பதே கல்வி கற்றதன் பயனாகும்.
* கள்ளம் கபடம் அற்றவராக இருங்கள். வீண்விவாதத்தில் ஈடுபடாதீர்கள்.
* பிறர் நலனில் அக்கறை செலுத்துங்கள். கடவுளின் அருளுக்கு பாத்திரமாவீர்கள்.
* அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாதீர்கள். இலவசமாக கிடைக்கும் எதையும் வாங்காதீர்கள்.
* புறக்கணிப்பவனிடமும் கோபம் வேண்டாம். அமைதியுடன் விட்டுக் கொடுங்கள்.
* யாரையும் பகைவனாக கருத வேண்டாம். உலகிலுள்ள அனைவரும் கடவுளின் பிள்ளைகளே.
* ஆடம்பர நோக்கில் செலவு செய்யாதீர்கள். முடிந்தால் தேவையைக் கூட குறையுங்கள்.
* கவுரவம் என்ற பெயரில் வழிதவறாதீர்கள். கடவுளைப் பணிவதே உண்மையான கவுரவம்.
* எதிலும் எளிமையைப் பின்பற்றுங்கள். உணவு, உடையில் ஆடம்பரம் கூடாது.
* நீங்கள் எந்த செயலில் ஈடுபட்டாலும் ஆழ்மனம் கடவுள் மட்டுமே சிந்திக்க வேண்டும்.
* சவாரி செய்பவன் குதிரையைப் பராமரிப்பது போல உடம்பையும் அக்கறையுடன் பேணுங்கள்.