தூய்மை பணியாளர்களுக்கு பாத பூஜை
ADDED :2051 days ago
குன்னூர்: குன்னூரில் பா.ஜ., நிர்வாகிகள் சார்பில், தூய்மை பணியாளர்களுக்கு, பாத பூஜை நடத்தப்பட்டது. கொரோனா காரணமாக, தூய்மை பணியாளர்கள், டாக்டர்கள், நர்ஸ்கள், போலீசார் உட்பட அத்தியாவசிய அரசு துறைகளை சேர்ந்தவர்கள் தீவிரமாக பணியாற்றுகின்றனர்.
இதில், நீலகிரி மாவட்டம், குன்னூரில் அதிகாலை முதல் தொடர்ந்து தீவிர தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளவர்களை கவுரவிக்கும் விதமாக, குன்னூர் நகர பா.ஜ., சார்பில், பாத பூஜை நடத்தினர். குன்னூர் நகராட்சியில், பா.ஜ., நிர்வாகிகள் ஈஸ்வரன், குங்குமராஜ், பாலாஜி, சரவணன், ஆனந்த், பாப் பண்ணன் ஆகியோர், 5 தூய்மை பணியாளர்களின் பாதங்களை மஞ்சள் நீரால் கழுவி, மலர்கள் தூவி, சாஸ்டாங்க நமஸ்காரம் செய்து வணங்கினர். தொடர்ந்து கைகூப்பி வணங்கி சால்வை போர்த்தி கவுரவிக்கப்பட்டனர்.