கொரோனாவில் இருந்து மீண்டு வர வேண்டி சிறப்பு யாகம்
ADDED :2008 days ago
மயிலாடுதுறை: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மருதூர் ராம வரதாஹினி மடத்தில் கொரானோ வைரஸ் தாக்குதலிலிருந்து உலகமக்கள் மீண்டு வர வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது.
நாகை மாவட்டம் செம்பனார்கோவில் அடுத்த மருதூரில் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த ராம வரதாஹினி மடம் அமைந்துள்ளது. மடத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கொரானா வைரஸிலிருந்து உலக மக்கள் விடுபடவும் உலக நன்மைக்காகவும் தன்வந்திரி ஹோமம் மற்றும் மகா சுதர்சன ஹோம் நடைபெறுகிறது. இதில் ஆலய அர்ச்சகர்கள் மற்றும் நிர்வாகிகள் மட்டும் கலந்து கொண்டனர்.