உத்தரகோசமங்கை பைரவருக்கு சிறப்பு பூஜை
ADDED :2003 days ago
உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி சன்னதி முன்பு உள்ள ஷேத்திர பாலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவர் பைரவருக்குபால், பன்னீர், இளநீர், திரவியப்பொடி உள்ளிட்ட 16 வகையான அபிஷேக, ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது.வெற்றிலை, எலுமிச்சை மாலை சாத்தப்பட்டது. பக்தர்கள் யாரும் பூஜையில் பங்கேற்கவில்லை. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீள்வதற்கான பிரார்த்தனை நடந்தது.