உலகப் புகழ்பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் ஒத்திவைப்பு
ADDED :2089 days ago
திருவாரூர் : கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிரசித்தி பெற்ற பல்வேறு கோவில் விழாக்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. உலகப்புகழ் பெற்ற மிகப்பெரிய தேரான திருவாரூர் ஆழித்தேரோட்டம் வரும் 4ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் அதிக அளவில் ஒன்று கூட கூடாது என்பதற்காக திருவாரூர் ஆழித்தேரோட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஆனந்த் அறிவித்துள்ளார்.