துன்பத்தில் இருந்து விடுதலை
ADDED :2160 days ago
ஒரு வீட்டின் கிணற்றில் மீன்கள் சில வசித்தன. கோடையில் நீர் வற்றியதால் அவை திண்டாடின.
இதை கவனித்த அந்த வீட்டு இளைஞன், வாளியில் நீர் நிரப்பிக் கொண்டு கிணற்றுக்குள் இறங்கினான். மீன்களைப் பிடித்து வாளியில் போட்டதும், அவை புத்துயிர் பெற்றன. மீன்களைக் காப்பாற்றிய மகிழ்ச்சியுடன் அவன் மேலே வந்தான். நீர்த்தொட்டி ஒன்றில் அவற்றை வளர்க்கத் தொடங்கினான். ஓரிரு வாரத்திற்குள் கோடை மழை தொடங்கியதால் கிணற்றில் நீர் சுரக்க ஆரம்பித்தது. மீண்டும் மீன்களை கிணற்றுக்குள் விட்டான்.
மனிதனும் இப்படித் தான்.... துன்பம் நேரும் போது மீன்கள் போல துடித்துப் போகிறான். இளைஞனின் உதவியால் மீன்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டது போல, ஆண்டவரின் உதவியை நாடினால் துன்பத்தில் இருந்து மனிதனும் விடுதலை பெற முடியும்.