உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மன் கோவில்களில் மணமக்கள் திருமணம்

அம்மன் கோவில்களில் மணமக்கள் திருமணம்

 மாமல்லபுரம், மாமல்லபுரம் மற்றும் நாயக்கன்பேட்டை அம்மன் கோவில்களில், எளிய முறையில், இரு திருமணங்கள் நடைபெற்றன.மாமல்லபுரம் அடுத்த, எடையூர், கொக்கிலமேடு, மீனவர் பகுதியைச் சேர்ந்தவர் வீராசாமி மகன் ரமேஷ், 26. அதே பகுதி, சேட்டு மகள் சங்கீதா, 24. இவர்கள் இருவருக்கும், திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. மாமல்லபுரம், தனியார் மண்டபத்தில், நேற்று நடைபெறவிருந்த திருமணம், ஊரடங்கு காரணமாக, கருங்குழி அம்மன் கோவிலில், பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர் முன்னிலையில், எளிமையாக நடந்தது. விழாவில் பங்கேற்ற அனைவரும், முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் நின்றனர்.அதேபோல், வாலாஜாபாத் அடுத்த, நாயக்கன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பன் மகன் மணவாளனுக்கும், அதே பகுதி முருகேசன் மகள் தமிழேந்திக்கும், ஊத்துக்காடு தனியார் திருமண மண்டபத்தில், நேற்று திருமணம் நடைபெறஇருந்தது. நாயக்கன்குப்பம் பொன்னியம்மன் கோவிலில் எளிமையாக நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !