சிவபெருமானுக்கு பிரதோஷ வழிபாடு
ADDED :1986 days ago
உடுமலை: போடிபட்டி, காரியசக்தி விநாயகர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. போடிபட்டி, சூர்யா கார்டன் காரியசித்தி விநாயகர் கோவிலில் ஜம்பு லிங்கேஸ்வரருக்கு பிரதோஷ பூஜை நடந்தது.
பல்வேறு திரவியங்களில் அபிேஷகம் செய்யப்பட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜை நடந்தது. மலையாண்டிபட்டணம், அழகாம்பிகை சமேத சித்தநாதேஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடாக சிறப்பு அபிேஷக அலங்காரத்துடன் பூஜை நடந்தது.* வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் சன்னதியில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு, சித்திரை மாதம் இரண்டாவது பிரதோஷ பூஜை, நேற்று முன் தினம் மாலை, நடந்தது.சுவாமிக்கு, பால், தயிர், மஞ்சள், இளநீர், தேன், திருநீறு உள்ளிட்ட, 16 வகையான அபிேஷக பூஜை நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்கார வழிபாடு நடந்தது. ஊரடங்கு காரணமாக, பிரதோஷ வழிபாட்டில் பக்தர்கள் பங்கேற்கவில்லை.