தென்காசி கோயிலில் பால் குடம் ஊர்வலம்
ADDED :5162 days ago
தென்காசி : தென்காசி கோயிலில் கொடை விழாவை முன்னிட்டு பால்குடம் ஊர்வலம் நடந்தது. தென்காசி சம்பாத்தெரு நடுமுத்தாரம்மன் கோயிலில் கடந்த 1ம் தேதி கால் நாட்டுடன் கொடை விழா துவங்கியது. நேற்று முன்தினம் குடி அழைப்பு, மா காப்பு அலங்கார தீபாராதனை, வாண வேடிக்கை நடந்தது. நேற்று காலையில் பால் குடம் ஊர்வலம் நடந்தது. பால்குடம் எடுத்த பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியே சென்று கோயிலை சென்றடைந்தனர். மதியம் அம்பாளுக்கு பாலாபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. மாலையில் பொங்கலிடும் வைபவம், அக்னி சட்டி ஊர்வலம், ஆயிரங்கண் பானை ஊர்வலம், மேளதாளம் முழங்க அம்மன் வீதி உலா நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழா கமிட்டியார் செய்திருந்தனர்.