திருவொற்றியூர் தியாகராஜர் பிரதோஷ வழிபாடு நேரடி ஒளிபரப்பு
ADDED :1965 days ago
சென்னை : திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி கோவிலில், பக்தர்கள் வசதிக்காக, இன்று நடக்கும் பிரதோஷ வழிபாடு, நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. சென்னை, திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலின் மாதாந்திர நிகழ்ச்சிகளில் ஒன்றான பிரதோஷ வழிபாடு, மிகவும் பிரசித்தி பெற்றது.ஊரடங்கை முன்னிட்டு, பக்தர்கள் வசதிக்காக, மே, 5ம் தேதி பிரதோஷ வழிபாடு, ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. தொடர்ச்சியாக, இன்று நடக்கும் பிரதோஷ நிகழ்ச்சியை, நேரடியாக ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. பக்தர்கள், https://www.youtube.com/channel/UC06h4eTrorI7eYw5B8aR5Ag - Thiyagarajaswamy Vadivudaiamman Temple official என்ற, யு டியூப் சேனல் மூலம் இன்று மாலை, 4:30 மணி முதல், 5:30 மணி வரை, நேரலையில் காணலாம்.