ஜாதக ரீதியாக நேரம் சரி இல்லாவிட்டால் என்ன செய்யலாம்?
ADDED :2013 days ago
நோய் தீர்க்க மருந்து இருப்பது போல ஜாதக ரீதியான தோஷத்திற்கும் பரிகாரம் உண்டு. எந்த கிரகத்தால் தோஷம் ஏற்பட்டதோ, அதற்குரிய பரிகாரத்தை செய்ய வேண்டும். உதாரணமாக திருமணத்தடை நீங்க வியாழனன்று தட்சிணாமூர்த்தியை வழிபடலாம். செவ்வாய் தோஷத்திற்கு முருகனுக்கு செவ்வாயன்று பாலாபிேஷகம் செய்யலாம்.