வேணுகோபால சுவாமி கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :1961 days ago
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் அம்மாவாசையை முன்னிட்டு வேணுகோபால சுவாமி ஊஞ்சல் உற்சவத்தில் அருள்பாலிதார்.நெல்லிக்குப்பம் பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் அமாவாசையை முன்னிட்டு கோமாதா பூஜை நடந்தது.சிறப்பு திருமஞ்சனமும் தீபாராதனையும் நடந்தது.பாமா ருக்குமணி சமேதராய் வேணுகோபால சுவாமி சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் உற்சவத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பூஜைகளை ரமேஷ் பட்டாச்சாரியார் செய்தார். அருள்தரும் ஐயப்பன் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.ஊரடங்கு அமலில் இருப்பதால் பக்தர்கள் இல்லாமல் பூஜைகள் நடந்தது.