கரூர் கோவில்களை திறக்ககோரி ஆர்ப்பாட்டம்
ADDED :1959 days ago
கரூர்: கரூர் மாவட்ட ஹிந்து முன்னணி சார்பில், கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் முன், நகர செயலாளர் வெற்றிவேல் தலைமையில் நூதன போராட்டம் நடந்தது. அதில், தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களை பக்தர்கள் வழிபாட்டுக்கு திறந்து விட வேண்டும், மதுக்கடைகளை திறக்கும் போது, கோவில்களை திறப்பதற்கு உள்ள, தடையை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஹிந்து முன்னணியினர் தோப்பு கரணம் போட்டு, நூதன போராட்டம் நடத்தினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்தி, பொருளாளர் ரமேஷ் குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.