மசூதியில் கூட்டம் சேர்த்து தொழுகையில் ஈடுபட்ட முத்தவல்லி மீது வழக்கு
ADDED :2055 days ago
சேலம்: ஊடரங்கு அமலில் உள்ள நிலையில், சேலம் கோட்டை கீழ் மசூதியில், கூட்டம் சேர்த்து தொழுகையில் ஈடுபட்ட முத்தவல்லி மீது, டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பொது இடங்களில் கூடவும், மசூதிகளில் கூட்டம் சேர்த்து தொழுகை நடத்தவும் போலீசார் தடை விதித்துள்ளனர். இந்நிலையில், ரம்ஜான் தினமான நேற்று சேலம், கோட்டை கீழ் மசூதியில் முத்தவல்லி ஜாகீர், 53, தலைமையில், 20 பேர் சேர்ந்து தொழுகையில் ஈடுபட்டனர். தடை அமலில் உள்ள நிலையில், போலீசாரின் எச்சரிக்கையை மீறி கூட்டம் சேர்த்ததாக, முத்தவல்லி ஜாகீர் மீது, டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.