கிருஷ்ணார்ப்பணமாக இருங்கள்!
ADDED :2265 days ago
‘கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்காதே’ என்பது பகவத் கீதையின் போதனை. மனம் எப்போதும் அலைபாயக்கூடியது. அதில் தோன்றும் எண்ணங்களை விட்டு விட்டு, நம் உடல், பொருள், ஆவி அனைத்தையும் கடவுளிடம் ஒப்படைத்து விட்டு, பணிகளில் கவனம் செலுத்தினால் நமக்கு வேண்டியதை எல்லாம் கடவுள் நிறைவேற்றுவார். இதையே ‘கிருஷ்ணார்ப்பணம்’ என்பர்.