திருக்காமீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழா ரத்து
ADDED :1956 days ago
புதுச்சேரி: வில்லியனுார் திருக்காமீசுவரர் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ தேர் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.இது குறித்து திருக்காமீஸ்வரர் கோவில் சிறப்பு அதிகாரி திருவரசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:வில்லியனுாரில் உள்ள கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் கோவிலில் வைகாசி பிரமோற்சவ தேர்திருவிழா நடைபெறுவது வழக்கம். கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக வழிபாட்டுத் தலங்களில் நடத்தப்படும் விழாக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. இதனால், திருக்காமீஸ்வரர் கோவிலில் இந்தாண்டு நடைபெற இருந்த வைகாசி பிரமோற்சவ தேர்திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.