உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சர்ச்சைகள் நிறைந்த காட்மேன் டீசர் நீக்கம்

சர்ச்சைகள் நிறைந்த காட்மேன் டீசர் நீக்கம்

 சென்னை : இந்து சமூகத்தை அவமதிக்கும் வகையிலும், பிரமாண சமூகத்தை இழிவுப்படுத்தியும், ஆபாசங்கள் நிறைந்து வெளியான காட்மேன் வெப்சீரிஸின் டீசருக்கு எழுந்த எதிர்ப்பால் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டது.ஜீ டியின் ஓடிடி தளமான ஜீ5யில் காட்மேன் என்ற வெப்சீரிஸ் வெளியாக உள்ளது. ஜெயப்பிரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இதை பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார். இந்த சீரிஸின் டீசர் இரு தினங்களுக்கு முன்பு வெளியானது. அதில் இந்து மதத்தை அவமதிக்கும் விதமான காட்சிகளும், பிராமணர் சமூகத்தை இழிவுப்படுத்தும் வசனங்களும், உச்சக்கட்ட ஆபாச காட்சிகளும் இடம் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.பிராமண சமூகத்தை இழிவுப்படுத்திய காட்மேன் படக்குழு மற்றும் ஜீ5 தளத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி இணையதளங்களில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்து. மேலும் சில இடங்களில் இந்த வெப்சீரிஸ் குழு மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. பலரும் சமூகவலைதளங்களில் கண்டனங்களை பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் சர்ச்சைகள் நிறைந்த காட்மேன் டீசரை சம்பந்தப்பட்ட ஜீ 5 நிறுவனம் யு-டியூப்பில் இருந்து நீக்கிவிட்டது. அதற்கு பதிலாக மற்றுமாரு புதிய டீசரை இன்று(மே 29) வெளியிட்டனர். பிறகு அதையும் நீக்கிவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !