சகல ஐஸ்வர்யங்களும் தரும் ஏழுமலையான் ஸ்லோகம்
ADDED :2051 days ago
ஓம் நமோ வேங்கடேசாயா நமஹ சகல ஐஸ்வர்யங்களும் கிட்ட பலன் தரும் ஏழுமலையான் ஸ்லோகம் "
ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்”
ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித,
வக்ஷஸம் ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே..
பொதுப் பொருள்: திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீநிவாஸப் பெருமாளே, நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களையெல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம். மகாலட்சுமி வசிக்கும் அழகு மார்புடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல நன்மைகளை பொழிபவரே, ஸ்ரீநிவாஸா, நமஸ்காரம்.