மூத்த குடிமக்களுக்கு இலவச தரிசனம்!
ADDED :1951 days ago
வயதில் மூத்த குடிமக்களும் ஜருகண்டி சொல்லித் தள்ளிடும் திருப்பதிகோவில் பாதுகாவலர்கள் இனி யாரைத் தள்ளும் என்று முழிக்கும் காலம் வந்துவிட்டது. 65 வயது கடந்த மூத்த குடிமக்கள் நாள் ஒன்றுக்கு 700 பேர் இலவசமாக தரிசனம் செய்யலாம் என்பது எப்படி?
நிபந்தனைகள்:
1) ஆதார் அட்டை அவசியம்.
2) 65 வயது முடிந்திருக்க வேண்டும்
3) காலை எட்டு மணிக்கு குறிப்பிட்ட இடத்தில் அறிக்கை செய்ய வேண்டும்.
4) காலை 10 மணி முதல்
மாலை 3 மணி வரை தரிசனம் நேரம்.
5) தினம் 700 பேருக்கும் அனுமதி உண்டு.
6.) உதவி செய்வதெற்கென உடனொருவர் செல்ல அனுமதி உண்டு அவளுக்கும் ஆதார் அவசியம்.
7) காலை உணவு பால் இலவசம்.
8.) அவர்களுக்கு 70 ரூபாய்க்கு 4 லட்டுகள் வழங்கப்படும்.
9) ஒருமுறை சென்றவர் 3 மாத காலத்திற்கு பின்னரே மீண்டும் அனுமதிக்கப்படுவர்.
10) இவை அனைத்தும் இலவச சேவையாகும்.